முன்னோடித் திட்டங்கள் (15)
- பிச்சைக்காரர் மறுவாழ்வுக்காக கலைஞரிடம் ரூ. 10,000/- வங்கிக் காசோலை அளிக்கிறார் எம்.ஜி.ஆர். (ஜூன் 3, 1971)
- செங்கற்பட்டு மாவட்டம் பரனூரில் தொழுநோய் மறுவாழ்வு இல்லத்தைத் திறந்து வைக்கிறார் கலைஞர். அமைச்சர் சத்தியவாணி முத்து உடன் இருக்கிறார். (அக்டோபர் 2, 1971)
- தமிழ்நாடு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு அடிக்கல் நாட்டும் விழா ஒன்றில் கலைஞர் பேசுகிறார். கல்வி அமைச்சர் நெடுஞ்செழியன், நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி மாறன் ஆகியோர் உடன் உள்ளார்கள். (அக்டோபர் 10, 1971)
- மெட்ராஸில் ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கி வைக்கிறார் கலைஞர், அருகில் எம்.ஜி.ஆர். (அக்டோபர் 16, 1971)
- கண்ணொளித் திட்டத்தின் பயனாளியின் வாழ்த்தை அன்புடன் பெறுகிறார் கலைஞர். (ஜனவரி 9, 1973)
- கைரிக்ஷா ஒழிப்புத் திட்டத்தில் பயனாளிக்கு சைக்கிள் ரிக்ஷா வழங்கும் கலைஞர். நாவலர் நெடுஞ்செழியன் உடன் உள்ளார்.
- வறியோரின் வாட்டத்தைப் போக்க இலவச அரிசி வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார் கலைஞர். (ஏப்ரல் 14, 1989)
- பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்குகிறார் கலைஞர். (ஜூன் 28, 1989)
- செங்கை அண்ணா மாவட்டம் வல்லக்கோட்டையில் ஆதிதிராவிட மக்களுக்கு இலவச கான்கிரீட் வீடு வழங்குகிறார் கலைஞர். (ஜனவரி 7, 1991)
- தமிழ்நாடு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு ஒன்றைத் திறந்து வைக்கிறார் கலைஞர்.
- மதுரையில் சமத்துவபுரம் துவக்க விழா. (ஆகஸ்டு 17, 1998)
- சத்துணவில் குழந்தைகளுக்கு வாரத்துக்கு இரண்டு முட்டை வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் கலைஞர். (ஜூலை 15, 2006)
- பயனாளிக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை வழங்குகிறார் கலைஞர். அருகில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறன். (மார்ச் 27, 2007)
- உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அண்ணா மறுமலர்ச்சித் திட்ட பதாகையைப் பார்வையிடுகிறார் கலைஞர். (செப்டம்பர் 3, 2007)
- பயனாளிகளுக்கு இலவச வேட்டி சேலைகளை வழங்குகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர். (ஜனவரி 1, 2010)